துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்தநானே வருவேன் படம் 2022ல் வெளியானது. படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் என்ற அடையாளத்துடன் அறிமுகம் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இரண்டு முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில், ‘மெண்டல் மனதில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ‘மெண்டல் மனதில்’ படத்தின் முதல் பாடலான ‘உயிரே உயிரே’ வரும் 23ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் முதல்பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.