சினிமா செய்திகள்

“ஜோ” பட இயக்குநர் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படம்

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை ‘ஜோ’ படத்தின் இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்குகிறார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.

மீண்டும் இணையும் ‘ஜோ’ கூட்டணி

'ஜோ' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மாளவிகா மனோஜ் மற்றும் அந்த இயக்குநருடன் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் முதன்முறையாக கைகோர்த்துள்ளார்.

‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றன.

வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தற்போது இப்படத்தின் புரோமோஷனின் முதல் கட்டமாக 'Look Book Starts From Tomorrow' என்ற அறிவிப்புடன் கூடிய ஒரு அழகான பென்சில் ஸ்கெட்ச் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜி.வி. பிரகாஷ் குமார் தோளில் பையை மாட்டிக்கொண்டு தாடியுடன் தீவிரமான சிந்தனையில் நடந்து செல்வது போன்ற தோற்றம் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள்

'ஜோ' பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எஸ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு, கதாநாயகனாக நடிக்கும் ஜி.வி. பிரகாஷ் குமாரே இசையமைப்பையும் மேற்கொள்கிறார்.

மேலும், இப்படத்திற்கு தனது தனித்துவமான காட்சி அமைப்புகளுக்காகப் புகழ்பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, கே. குமார் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து தயாரிப்புப் பணிகளைக் கவனித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT