சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் “நிஞ்சா” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீபதி சினிமாஸ் வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

முருகு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பிரார்த்தனா நாதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிஞ்சா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். ஜிவி பிரகாஷ். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த கென் கருணாஸ் இயக்கி நடித்த ‘யூத்’ படத்தின் பாடல்கள் வைரலானது. ‘ஜோ’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளார்.

‘நிஞ்சா’ என பெயரிடப்பட்ட புதிய படம்

இயக்குநர் முருகு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘நிஞ்சா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் மீண்டும் கதாநாயகனாக புதிய கதைக்களத்தில் களமிறங்குகிறார்.

முக்கிய கதாபாத்திரங்களில் பாரத், பிரார்த்தனா நாதன்

‘நிஞ்சா’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் பாரத் மற்றும் பிரார்த்தனா நாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிராத்தனா நாதன் ‘பார்க்கிங்’ மற்றும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றுகிறார். இப்படத்தை சினிஷ் மற்றும் லேஅர்ன் அண்ட் டீச் புரோடக்சன் தயாரிக்கவுள்ளது.

படப்பிடிப்பு தொடக்கம்

ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படமான ‘நிஞ்சா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா மற்றும் பிரம்மாண்ட பூஜை கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீபதி சினிமாஸ் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

முருகு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பிரார்த்தனா நாதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிஞ்சா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 3 வாரத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT