சென்னை,
தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
தமிழ் தாண்டி தெலுங்கு, இந்தி மொழி படங்களுக்கும் இசைய மைத்துவருகிறார். தற்போது, டிசி, ஜெயிலர் 2, தி பாரடைஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், திரையுலகில் அதிக சர்ச்சைகளுக்கும் பெயர் போன அனிருத், இவருடன் காதல், இவருடன் திருமணம் என்று அடிக்கடி கிசுகிசுக்கள் அவரை பற்றி வெளிவந்து கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது. அந்தவகையில் சமீபத்தில் அனிருத் பற்றிய ஒரு 'கிசுகிசு' வைரலாகி வருகிறது. தொழில் அதிபர் ஒருவரின் மகளை காதலிப்பதாகவும், ஸ்பெயினில் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடை பெற இருப்பதாகவும் ஒரு தகவல் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதற்கு அனிருத் விளக்கம் அளிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.