சென்னை,
இயக்குநர் இமயம் பாரதிராஜா கடந்த வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாரதிராஜா விரைவில் முழு உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டுமென திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.