சினிமா செய்திகள்

“ஹார்ட் பீட்” நாயகி தீபா பாலு நடிக்கும் புதிய கிரைம் திரில்லர் திரைப்படம்

மாறன் கார்த்திகேயன் இயக்கும் ‘ஸ்டேஷன் - ஹண்ட் ஃபார் சர்வைவல்’ படத்தில் தீபா பாலு நடிக்கிறார்.

‘‘ஹார்ட் பீட்’ நாயகி தீபா பாலு நடிக்கும்‘ஸ்டேஷன் - ஹண்ட் ஃபார் சர்வைவல்’ திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகம், இரண்டாம் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மூன்றாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தின் பூஜை

ஹார்ட் பீட் நாயகி தீபா பாலுவின் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன் - ஹண்ட் ஃபார் சர்வைவல்’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் நாயகனாக அஜய் கார்த்தி நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கத்தில் இந்தப்படம் ஒரே இரவில் நடக்கும் திரில்லர் கதையாக இந்தப் படம் உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தில் ரொமான்ஸ், கிரைம், ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாக இருக்கிறது. இதில் நாயகனாக காளிதாஸ் 2, டார்க் படங்களில் அசத்திய அஜய் கார்த்திக் நாயகனாகவும் தீபா பாலு நாயகியாகவும் நடிக்கிறார்கள்.

கேபி இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக கே தினேஷ் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் வெங்கடேஷ், தினேஷ் பிராபகர், ரமேஷ் திலக், அனு ஸ்ரீ வேலன், சப்பானி பாய்ஸ் முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அருண் ராஜ் இசையமைக்கவிருக்கிறார்.

பூஜையில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள்

‘ஹார்ட் பீட்’ தொடரின் மூலம் பிரபலமான நடிகை தீபா பாலு நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஸ்டேஷன் ஹண்ட் ஃபார் சர்வைவல்’ படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் அஜய் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் பூஜை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT