சினிமா செய்திகள்

நாளை தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! (12.06.2026)

நாளை தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வருகிற 12ந் தேதி (நாளை) தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

1. ஹபீபி

மீரா கதிரவன் இயக்கியுள்ள படம் `ஹபீபி'. இஸ்லாமிய குடும்பம் ஒன்றின் வாழ்க்கையும், அது சார்ந்த சிக்கல்களுமே கதைக்களம்.

இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஈஷா எம்,மாளவிகா மனோஜ்,தனஸ்ரீ, சுதாகரன், இயக்குனர் கஸ்தூரி ராஜா நடித்துள்ளனர். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

2. சாருகேசி

சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள படம் `சாருகேசி'. பிரபல கர்நாடக பாடகர் ஒருவருக்கு அல்சைமர் வியாதி வந்த பின்னர் நடக்கும் விஷயங்களே கதை.

ஓய்.ஜி.மகேந்திரன் நடத்திய புகழ்பெற்ற இசை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, 'சாருகேசி' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுகாசினி, ரம்யா பாண்டியன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

3. மூன்றாம் கண்

விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள படம் `மூன்றாம் கண்'. நிறுவனத்தின் மேலாளர் கொலை செய்யப்பட, அதை யார் செய்தது என்ற விசாரணைகளே கதை.

சசோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜீஸ் இசையமைத்துள்ளார். ராஜ் பிரதாப் பின்னணி இசை அமைத்துள்ளார்.

4. வள்ளுவன்

சீனு, ஆஷ்னா நடித்துள்ள படம் `வள்ளுவன்'. கொலையை திட்டமிட்டு அதை காவல்துறைக்கும் சொல்லிவிட்டு செய்யும் ஒரு கொலைகாரனை துரத்துவதே கதை.

5. நிழல்

குமார் இயக்கியுள்ள படம் `நிழல்'. கொடூர கொலைக்கு சாட்சியாகும் இரட்டைச் சகோதரிகள் பற்றிய கதை.

6. ஆட்டி

கிட்டு இயக்கியுள்ள படம் `ஆட்டி'. தேயிலைத் தோட்டத்தில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பெண்ணுக்கு நிகழும் அநீதியும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளுமே கதை.

பெண்களின் சமூக பங்கு மற்றும் அவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடித்துள்ளார். காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.