சென்னை,
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வருகிற 13 மற்றும் 14ந் தேதிகளில் தியேட்டர்களில் எந்தெந்த படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
* மை லார்ட்
"ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள மை லார்ட். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். குரு சோகசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
* பூக்கி
விஜய் ஆண்டனி தயாரிப்பில், அவரது அக்கா மகன் அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ள படம் பூக்கி. சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
* மைலாஞ்சி
அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ள படம் மைலாஞ்சி. அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் 'கன்னிமாடம்' படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். 'கோலிசோடா 2' புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், தங்கதுரை, சிங்கம்புலி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
* கா தி பாரஸ்ட்
இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் 'கா தி பாரஸ்ட்'. இந்த படத்தில் ஆண்ட்ரியா, காட்டுக்குள் சென்று பறவைகள் மற்றும் விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக, ஆக்சன் நிறைந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
* ஸ்வீட்டி நாட்டி கிரேஸி
‘இனிது இனிது’, மிஷ்கின் இசையமைத்த ‘டெவில்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள த்ரிகுண், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’. அனு விஷுவல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் வி.எம்.ஆர்.ரமேஷ், ஆர்.அருண் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜி.ராஜசேகர் இயக்கியுள்ளார். இதில் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா உட்பட பலர் நடித்துள்ளனர்.இப்படத்துக்கு அருணகிரி இசையமைத்துள்ளார்.
* டிரீம் கேர்ள்
எம்.ஆர். பாரதியின் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் டிரீம் கேர்ள். இதில் நாயகனாக ஜீவாவும் நாயகியாக ஹரிஷ்மிதாவும் நடித்துள்ளனர். காதல் கதையாக உருவாகியுள்ள ட்ரீம் கேர்ள், வெறும் 20 நாள்களிலேயே உருவாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
* தெரிஞ்சா காதலிங்க
கஜேந்திரன் இயக்கத்தில் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் தெரிஞ்சா காதலிங்க. கிராமத்தில் நடக்கும் இந்தக்காதல் கதையில் கிரண்,நந்தினி ஆகிய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
* பங்கி
கே.வி. அனுதீப் இயக்கத்தில் கயாடு லோஹர் மற்றும் விஷ்வக்சென் இணைந்து நடித்துள்ள படம் பங்கி. இந்தப் படத்தில், விஷ்வக்சென் ஒரு திரைப்பட இயக்குனராக ஒரு புதிய வேடத்தில் நடித்துள்ளார். பீம்ஸ் செசிரோலியோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
* கப்புள் பிரண்ட்லி
அஸ்வின் சந்திரசேகர் கதை ,திரைக்கதை எழுதி இயக்க சந்தோஷ் சோபன்,மானசா வாரனாசி ,யோகி பாபு ,லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ள படம் கப்புள் பிரண்ட்லி. இதில் மானஷா வாரணாசி மற்றும் சந்தோஷ் ஷோபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இண்ட்டீரியர் டெக்ரேசன் டிசைனர் ஆக சென்னையில் வாழும் நாயகன் நாயகியை சந்தித்ததும் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றஙகள் தான் கதை.
* சீதா பயணம்
அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “சீதா பயணம்” . இதில் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.
* மவுனம் பேசியதே
அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிசா, நந்தா, நேஹா மற்றும் பலர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் காதல் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் ரீ ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
* மின்னலே
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய முதல் படம் திரைப்படம் மின்னலே. இந்த படத்தில் மாதவன்,ரீமாசென் ,அப்பாஸ் மற்றும் பலர் நடிக்க 2001 ல் ரிலீஸானது. இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு மறுநாள் ரீ ரிலீஸ் ஆகிறது.
*காதலர் தினம்
இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான படம் காதலர் தினம். இதில் குணால் ,சோனாலி பிந்த்ரே ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பாடம் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
*உயிருள்ளவரை உஷா
டி. ராஜேந்தர் எழுதி, இயக்கி, இசையமைத்து நடித்த காதல் அதிரடித் திரைப்படம் உயிருள்ளவரை உஷா. 1983 ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சரிதா, நளினி, கங்கா மற்றும் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டு காதலர் தினத்தில் வெளியாக உள்ளது.