சினிமா செய்திகள்

நாளை தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! (19.03.2026)

நாளை தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வருகிற 19ந் தேதி (நாளை) தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

"துரந்தர் தி ரிவெஞ்ச்"

ஜியோ ஸ்டியோ தயாரிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் "துரந்தர் தி ரிவெஞ்ச்" . இதில், அர்ஜுன் ராம்பால், ஆர். மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

"யூத்"

பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் "யூத்". இதனை கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ளார். இதில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

"உஸ்தாத் பகத் சிங்"

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் "உஸ்தாத் பகத் சிங்". ஸ்ரீலீலா, ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

"ஆடு 3"

மலையாள நடிகர் ஜெயசூரியா, விநாயகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் "ஆடு 3". இப்படத்தை மிதுன் மானுவல் தாமஸ் தான் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை வேதிகா சிறப்பு நடனமாடியுள்ளார். கல்ட் காமெடி கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

"லவ் மாக்டெயில் 3"

டார்லிங் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "லவ் மாக்டெயில் 3". யதுநந்தன், மிலானா மற்றும் கிருஷ்ணா நடித்துள்ள இந்தப் படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார். நகுல் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.