சென்னை,
மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கவண். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் மடோனா செபாஸ்டியன், டி. ராஜேந்தர், போஸ் வெங்கட், ஜெகன், பாண்டியராஜன், விக்ராந்த், ஆகாஷ் தீப், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். கவண் படம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் கவண் படத்திற்காக ஹிப்ஹாப் ஆதிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தனக்கு அறிவிக்கப்பட்ட அந்த விருதை மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு சமர்பித்துள்ளார். அவரது இந்த செயல் திரையுலகில் பாராட்டுகளை பெற்றுள்ளது.