சினிமா செய்திகள்

ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2! புதிய பாடல் வெளியீடு!

ஹிப்ஹாப் ஆதியின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சென்னை,

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார். மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். ஹிப்ஹாப் ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் "மீசையமுறுக்கு". இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஹிப்ஹாப் ஆதியின் "மீசையமுறுக்கு 2" படத்தில் கேத்திகா ஷர்மா நாயகியாகவும், யூடியூபர் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஏற்கெனவே, இப்படத்தின் ஆரா 10/10, பப்பாளி பழமே ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், "மீசையமுறுக்கு 2" படத்தின் "கோயிந்தம்மா” எனும் மற்றொரு புதிய பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை, பாடகர்கள் கௌஷிக் கிரிஷ், கானா வினோத், கானா உலகம் தரணி மற்றும் கானா சுதாகர் ஆகியோர் பாடியுள்ளனர்.