சினிமா செய்திகள்

75 நாட்களில் உலகளவில் ‘தாய் கிழவி’ வசூல் எவ்வளவு..? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 27ந் தேதி வெளியான படம் ‘தாய் கிழவி’. இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

75 வயது மூதாட்டியைச் சுற்றியுள்ள கதையை மையமாகக் கொண்ட இப்படம், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழு கதையையும் நகர்த்தும் படங்கள் மிகவும் குறைவு. ஆனால் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் & பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த படம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, 75  நாட்களுக்கும் மேலாக ஓடி, சாதனை படைத்துள்ளது. இந்த படம் தியேட்டர் மட்டுமல்லாமல் ஓடிடியிலும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தாய்கிழவி படம் வெளியாகி 75 நாட்களை கடந்துள்ள நிலையில், இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் 75 நாட்களில் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.