சினிமா செய்திகள்

‘மனிதர்கள் மதத்தை கண்டுபிடித்தனர்; பயம் காரணமாக பிரார்த்தனை செய்தனர்’ - கிருத்திகா உதயநிதி

நமது அபத்தமான இருப்பே கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கிறது என கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மனிதர்களாகிய நாம் நமது குரங்கு மூளையில் ஏற்பட்ட ஒரு பரிணாமக் குறைபாட்டின் காரணமாகவே நமக்குள் சண்டையிட்டு வாக்குவாதம் செய்து வருகிறோம் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குநருமான கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

மதம்

“பூமி தட்டையானது என்று நினைத்தபோதும், பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் நம்மைக் கொல்லக்கூடும் என்பதை அறியாதபோதும் மனிதர்கள் மதத்தை கண்டுபிடித்தனர். அவர்கள் பயத்தின் காரணமாக பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

குரங்கு மூளை

ஆனால் இன்று, நமக்கு நன்கு தெரிந்திருந்தும், அர்த்தமற்ற சடங்குகளைப் பற்றி நாம் இன்னும் நீதி மற்றும் அறிவுசார் மன்றங்களில் விவாதம் நடத்தி வருகிறோம். நமது அபத்தமான இருப்பு(silly existence), கடவுள் இல்லை என்பதையும், நமது குரங்கு மூளையில் ஏற்பட்ட ஒரு பரிணாமக் குறைபாட்டின் காரணமாகவே நாம் சண்டையிட்டு வாக்குவாதம் செய்கிறோம் என்பதையும் நிரூபிக்கிறது என்ற வாதத்தை நான் இப்போதும் முன்வைக்க விரும்புகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT