சினிமா செய்திகள்

“முழு ஈடுபாட்டுடன் நடித்தேன்” – ‘எக்ஸாம்’ குறித்து துஷாரா பேச்சு

'எக்ஸாம்' வெப் தொடரை இயக்குனர் சற்குணம் இயக்கியுள்ளார்.

சென்னை,

பிரபல இயக்குனர் சற்குணத்தின் இயக்கத்தில் துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘எக்ஸாம்’. இந்த தொடரில் அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரபரப்பு திருப்பங்கள் நிறைந்த நாடகமாக உருவாகியுள்ள எக்ஸாம் வெப் தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற 15ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இந்த தொடரின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை துஷாரா விஜயன் ‘எக்ஸாம்’ வெப் தொடரில் நடித்த அனுபவம் குறித்து பேசினார்.

அதாவது, 'எக்ஸாம் வெப் தொடரின் கதையை கேட்ட உடனே எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் விஜயசாந்தி நடிக்கக்கூடிய ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது. என்னுடைய முழு ஈடுபாட்டையும் கொடுத்து நான் இதில் நடித்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.