சினிமா செய்திகள்

நான் மலையாள சினிமாவின் பெரிய ரசிகை - நடிகை சுருதி ஹாசன்

நடிகை சுருதி ஹாசன் துல்கர் சல்மானுடன் இணைந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மலையாள படத்தில் நடிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. சரியான கதைக்காகக் காத்திருக்கிறேன் என நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை சுருதி ஹாசன். தமிழில் 7ஆம் அறிவு, 3, பூஜை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடிப்பு தவிர்த்து பாடகி மற்றும் இசையமைப்பாளர் போன்ற பன்முக தன்மைகளை கொண்டவர். இவர் நடித்த பான் இந்திய திரைப்படமான ‘சலார்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.

தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ஷ்ருதிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது, நடிகர் துல்கர் சல்மானுடன், ‘ஆகாஷம் லோ ஒக்க தாரா’ என்கிற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய நடிகை சுருதி ஹாசன், “நான் மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகை. இன்னும் மலையாளத்தில் நடிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. எப்போதும் அந்த ஆசை இருந்துகொண்டேதான் இருக்கிறது. சரியான கதைக்காகக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனால், விரைவிலேயே சுருதி மலையாள சினிமாவில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT