கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

என் உணர்ச்சிகளை படத்தின் வழியே கடத்துகிறேன் - ஹிப்ஹாப் ஆதி

என்னை பொறுத்தவரை படத்தை நேர்மறை சிந்தனையுடன் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்று ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.

அனந்திதா சுந்தர் தயாரித்து ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்துள்ள 'மீசைய முறுக்கு-2' படம் கடந்த வாரம் வெளியானது. சைத்ரா ஆர்ச்சர், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் வெற்றிப் பெற்றதை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.

இதில் ஹிப்ஹாப் ஆதி பேசும்போது, "என்னை பொறுத்தவரை என் உணர்ச்சிகளை படத்தின் வழியே கடத்துகிறேன். என் படங்களில் ஒரு புத்துணர்ச்சி இருக்கும். அதுதான் பெரிதும் எதிர்பார்ப்பது. மற்றபடி திரைக்கதையில் பெரியளவில் மெனக்கெட மாட்டேன். என்னை பொறுத்தவரை நேர்மறை சிந்தனையுடன் ரசிகர்கள் கொண்டாட வேண்டும். அதுதான் என் இலக்கு.

ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆதரவுக்கரம் என்னவென்றால், சுதந்திரம் தான். அப்படி என் கலையை நான் எந்தவித தலையீடு இல்லாமல் இந்தப் படத்தில் கொடுத்தேன். அதற்காக தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. ஒரு படம் இப்படித்தான் இருக்கவேண்டும். அப்படித்தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் நான் யோசித்தது கிடையாது.

என் படத்துக்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. இனி என் பயணம் நல்லபடியாகவே இருக்கும் என்று நம்புகிறேன்". என்றார்.

SCROLL FOR NEXT