பிரபல தெலுங்கு நடிகர் அகில் அக்கினேனி. 'ஹலோ', 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' போன்ற படங்களில் ஸ்டைலிஷான நகரத்து இளைஞராகவும், 'ஏஜென்ட்' படத்தில் ஸ்பையாகவும் நடித்த இவர், இப்போது தன்னை முற்றிலும் மாற்றி கிராமத்து இளைஞராக களம் இறங்கியுள்ள படம் லெனின். இந்த படத்தில் அவர் ஒரு முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார்.
முரளி கிஷோர் அப்பூரு இயக்கி உள்ள இப்படத்தை அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் சூரியதேவரா நாக வம்சி இணைந்து தயாரித்துள்ளனர். நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், லெனி படத்தை பாராட்டி நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லெனின் திரைப்படம் குறித்த சிறப்பான கருத்துகளைக் கேட்டு வருகிறேன். குறிப்பாக அகில் அக்கினேனியின் நடிப்புக்குக் கிடைத்துள்ள ஒருமித்த பாராட்டுக்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றன. அகில் எனக்கு மற்றொரு மகனைப் போன்றவர்; ஒவ்வொரு படத்திலும் அவர் வளர்ந்து வருவதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது அருமை நண்பர் நாகார்ஜுனா மற்றும் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். விரைவில் 'லெனின்' படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இப்படம் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார்.