கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

தமிழ் ரசிகர்களின் அன்புக்கு என்றுமே கடமைப்பட்டுள்ளேன் - மாளவிகா மனோஜ்

சினிமாவில் பட்ட கஷ்டமும், உழைப்பும் வீண் போகாது என்று நடிகை மாளவிகா மனோஜ் தெரிவித்துள்ளார்.

மீரா கதிரவன் இயக்கத்தில் ஈசா, மாளவிகா மனோஜ், அருள்குமார், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன் உள்ளிட்டோர் நடித்த 'ஹபீபி' படம் சமீபத்தில் வெளியானது. 1980-களில் தென்தமிழகத்தில் வாழும் தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியலையும், கலாசாரத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

'ஹபீபி' படத்தின் வெற்றியை சென்னையில் படக்குழுவினர் கொண்டாடினர். இந்த நிகழ்வில் நடிகை மாளவிகா மனோஜ் பங்கேற்று பேசும்போது, "ஹபீபி நான் தமிழில் நடித்த முதல் படம். ஆனாலும் பல தடைகளை தாண்டி காலதாமதமாக வந்து 'ஹிட்' அடித்திருக்கிறது. சினிமாவில் பட்ட கஷ்டமும், உழைப்பும் வீண் போகாது.

தமிழ் ரசிகர்கள் எனது விருப்பத்துக்குரியவர்கள். அவர்களின் அன்புக்கு என்றுமே நான் கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பை காப்பாற்றுவேன்", என்றார்.