சினிமா செய்திகள்

“நான் அப்படிப்பட்டவள் இல்லை”.. ரசிகர்களிடம் தர்ஷா குப்தா விளக்கம்

எனக்கென்று சில எல்லைகள் உண்டு பணம், புகழுக்காக நான் எல்லை மீறமாட்டேன் என்று நடிகை தர்ஷா குப்தா விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னை,

சமீபத்தில் ஒரு செயலி குறித்த அறிவிப்பை தர்ஷா குப்தா வெளியிட்டார். இதையடுத்து அந்த செயலி குறித்தும் கடுமையாக விமர்சித்த ரசிகர்கள், தர்ஷா குப்தாவையும் வறுத்தெடுத்தனர்.

விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் நடிப்பில் வெளியான 'ஓ மை கோஸ்ட்' படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். அதில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை குஷிப்படுத்தி வருகிறார்.

என்ன நடக்கிறது என்பதே எனக்கு தெரியாது?

சமீபத்தில் ஒரு செயலி குறித்த அறிவிப்பை தர்ஷா குப்தா வெளியிட்டார். இதையடுத்து அந்த செயலி குறித்தும் கடுமையாக விமர்சித்த ரசிகர்கள், தர்ஷா குப்தாவையும் வறுத்தெடுத்தனர்.

இதையடுத்து தர்ஷா குப்தா கூறுகையில், ''என்னை நேசித்து வந்தவர்களிடம், நான் எப்படிப்பட்டவள்? என்பதை விளக்க வேண்டிய நிலை வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. சம்பந்தப்பட்ட செயலியில் என்ன நடக்கிறது? என்பதே எனக்கு தெரியாது. அது ரசிகர்களுடன் ஜாலியாக பேசும் தளம் என்று மட்டுமே நினைத்தேன்.

புகழுக்காக நான் எல்லை மீறமாட்டேன்

அதனால் தான் இணைந்தேன். கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிரலாம், ஆனால் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. பணம், புகழுக்காக நான் எல்லை மீறமாட்டேன். நான் ஒருபோதும் செய்யாத ஒரு விஷயத்திற்காக என்னை நினைக்க வேண்டாம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அறிந்த அதே நபராகவே என்னை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'', என்று குறிப்பிட்டார்.