சென்னை,
90-களின் துவக்கத்தில் தெலுங்கில் அறிமுகமான ரம்பா, தமிழில் 'உள்ளத்தை அள்ளித்தா' படமும் மூலம் நாயகியாகி அறிமுகம் ஆகி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். "அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா" என பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்தார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரம்பா , கனடாவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து அங்கு செட்டில் ஆனார். தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாயான ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ரம்பா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: எனக்கு பச்சைக் குத்தி கொள்ளும் எண்ணம் ஒரு போதும் இல்லை. ஊசியை பார்த்தால் எனக்கு பயம். 3 குழந்தைகள் எனக்கு பிறந்த பிறகும் பச்சைக் குத்தி கொள்வதில் பயம் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு என் கணவரின் பெயரை பச்சைக் குத்தி கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால் திருமணமாகி சிறிது காலத்திலேயே அடுத்தடுத்து 3 குழந்தைகளுக்கு தாயானேன். இப்போது கணவர், என் குழந்தைகள் உள்பட 4 பெயர்களை பச்சைக் குத்தி கொள்ள வேண்டும். ஆனால் என்னால் அதை செய்ய முடியாது. காரணம் அவ்வளவு வலியை என்னால் தாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.