சினிமா செய்திகள்

"அந்தப் பெண்ணின் நடிப்பை மறக்க முடியவில்லை..." சாச்சனா நமிதாஸை பாராட்டிய டாம் ஹேங்க்ஸ்

'மகாராஜா' படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா நமிதாஸின் நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

"அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை. என்ன ஒரு அற்புதமான நடிகை!" என்று ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் பாராட்டியுள்ளார்.

'மகாராஜா' திரைப்படம்

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மகாராஜா'. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா நமிதாஸின் நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அவரது நடிப்பை ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாச்சனாவின் நடிப்பில் வியந்த ஹாலிவுட் நடிகர்

சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினரான கவிதா குப்தா இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதாவது, 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி கலை அருங்காட்சியகத்தின் (LACMA) நிகழ்ச்சியில் டாம் ஹேங்க்ஸைச் சந்தித்தபோது, அவருக்கு இந்தியத் திரைப்படங்களைப் பரிந்துரைத்துள்ளார். அப்போது 'மகாராஜா' திரைப்படத்தையும் பார்க்கும்படி கூறியுள்ளார்.

"என்ன ஒரு அற்புதமான நடிகை!"

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் டாம் ஹேங்க்ஸை மீண்டும் சந்தித்தபோது, அவரே 'மகாராஜா' திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அப்போது படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸின் நடிப்பைப் பாராட்டிய டாம் ஹேங்க்ஸ், "அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை. என்ன ஒரு அற்புதமான நடிகை!" என்று வியந்து கூறியதாக கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் சேதுபதி ஏற்றிருந்த தந்தை கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான கதைக்களம் குறித்தும் டாம் ஹேங்க்ஸ் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. சர்வதேச எம்மி விருது நிகழ்ச்சியை ஒட்டி விஜய் சேதுபதி தொடர்பான சந்திப்புகளின்போது இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT