சென்னை,
பெரிய ஹீரோயின் என்ற இமேஜில் நடிக்கவேண்டும் என்பதெல்லாம் என் ஆசையே கிடையாது. ஒரு படத்தில் நடித்தாலும், அந்த படத்தில் வரும் எனது கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றபடி நான் இமேஜ் பார்த்து நடிப்பது கிடையாது”. என்று பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முக்கிய கதாநாயகியாக உருவெடுத்து வரும் பிரீத்தி முகுந்தன், 'பிளாஸ்ட்' படத்தின் மூலம் அதிரடி நாயகியாக மாறிப் போயுள்ளார். தற்போது அசோக் செல்வனுடன் இணைந்து நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. பாலிவுட் சினிமாவிலும் கால்தடம் பதிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
"ஒருவன் தன் காதலிக்காக, ஒருத்தி தன் காதலருக்காக எந்த எல்லை வரை செல்கிறாள்? என்பது தான் 'அன்பில் அவன்' படத்தின் கதை. அசோக் செல்வன் பற்றி பெரியளவில் தெரியாது. ஆனாலும் சமத்தான பையன் மாதிரியான கதாபாத்திரங்களிலேயே நடிப்பார். ஆனால் செட்டில் சமத்து பையன் கிடையாது. படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பதால் கொஞ்சம் ஓவராக ஆட்டம் போட்டுவிட்டார். இந்த படத்தை பார்த்து செல்லும் ரசிகர்கள், தங்கள் மனதில் காதலையும், கனவையும் நோக்கி வெறித்தனமாக செல்லவேண்டும் என்ற உத்வேகத்தையும் எடுத்து செல்வார்கள்.
தற்போது தனுசுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். முதன்முதலாக இப்போதுதான் கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்கிறேன். மதுரை மக்களின் பழக்க வழக்கங்களை இன்னும் அதிகமாக கற்றுக்கொண்டு வருகிறேன்.
ஆக்ஷன் கதாபாத்திரங்கள் எனக்கு பொருத்தமாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் நடிகர்கள் அதிரடியில் இறங்கினால் ரசிகர்கள் ரசிப்பார்கள். ஆனால் கதாநாயகி அதிரடியில் ஈடுபட்டாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். இது எனக்கு பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் தருகிறது.
விஜயசாந்தி போல ஒரு லேடி சூப்பர்ஸ்டாராக ஆக்ஷன் - அதிரடியில் கலக்க ஆசைப்படுகிறேன். கெத்தாக இருக்கும் அல்லவா.... எனக்கும் அதிரடி படங்களில் கலக்க ஆசையாகவே இருக்கிறது. ஆனால் அந்த படங்களும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும், பெரிய ஹீரோயின் என்ற இமேஜில் நடிக்கவேண்டும் என்பதெல்லாம் என் ஆசையே கிடையாது. ஒரு படத்தில் நடித்தாலும், அந்த படத்தில் வரும் எனது கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றபடி நான் இமேஜ் பார்த்து நடிப்பது கிடையாது”. என்று தெரிவித்துள்ளார்.