கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

என்னை எப்படி விமர்சித்தாலும் கவலையில்லை - கங்கனா ரணாவத்

மனதில் எதையும் மூடி வைத்து பேசும் பழக்கம் எனக்கில்லை என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகையாக திகழும் கங்கனா ரணாவத், தமிழில் 'தாம்தூம்', 'சந்திரமுகி-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அரசியலில் களமிறங்கி தற்போது எம்.பி.யாகவும் இருக்கிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரணாவத் பேசிய கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன.

அப்போது அவர் கூறும்போது, "என்னை பொறுத்தவரை நான் கண்ணாடி மாதிரி. என் எதிரில் உள்ளவர் என்ன மனநிலையை காட்டுகிறாரோ, அதை அப்படியே பிரதிபலிப்பேன். என்னிடம் அன்பை காட்டினால் நான் அன்பு காட்டுவேன். எதிர்ப்பை கொட்டினால் நானும் எதிர்ப்பை கொட்டுவேன்.

என் மனதில் எதையும் மூடி வைத்து பேசும் பழக்கம் எனக்கில்லை. இதற்காக என்னை எப்படி விமர்சித்தாலும் கவலையில்லை. கஷ்டப்பட்டு நல்லவராக நடிப்பதை காட்டிலும், உண்மையான கெட்டவராக இருந்துவிடலாம்" என்றார்.

SCROLL FOR NEXT