சினிமா செய்திகள்

பணத்திற்காக முத்த காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை - நடிகை சாய் பல்லவி

கவர்ச்சி கதாபாத்திரங்கள் முத்த கட்சிகள் மற்றும் காதல் காட்சிகளில் நடிப்பதை சாய் பல்லவி தவிர்த்து வருகிறார்.

புதிய கார் வாங்குவதற்காகவோ கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக நாயகர்களுடன் முத்த காட்சிகளின் நடிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.

‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் ஹிட்டானது. தமிழகத்தில் இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. நடிகை சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான அமரன், தண்டேல் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்றதால் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகையாக சாய் பல்லவி மாறியுள்ளார்.

அமீர் கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக, ''ஏக் தின்'' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'ராமாயணம்' படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.

நடிகை சாய் பல்லவி சினிமா நடிப்பில் தனக்கென ஒரு தனி கொள்கையை சினிமா நடிப்பில் தொடக்கத்தில் இருந்தே கடைபிடித்து வருகிறார். கவர்ச்சி கதாபாத்திரங்கள் முத்த கட்சிகள் மற்றும் காதல் காட்சிகளில் நடிப்பதை சாய் பல்லவி தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் சாய் பல்லவி “சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே நான் முத்த காட்சிக்கு முற்றிலும் எதிரானவள். அது போன்ற காட்சிகளில் நடிப்பதற்கு என் மனசாட்சி அனுமதிக்காது. இந்த உலகில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஒரு ஆடம்பரமான வீடு நல்ல கார் வேண்டும் என விரும்புகிறார்கள். கடவுளின் அருளால் எனக்கு அப்படிப்பட்ட ஆடம்பரமான வாழ்க்கையும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது. ஆடம்பரத்திற்காக மட்டும் நான் எப்போதும் படங்களில் நடிப்பதில்லை. இன்னொரு புதிய கார் வாங்குவதற்காகவோ கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக நாயகர்களுடன் முத்த காட்சிகளின் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. வரம்பு மீறிய காதல் காட்சிகளில் நடிக்க வேண்டுமானால் வேறு யாரையாவது தேடுங்கள். என்னிடம் வராதீர்கள். அழுத்தமான நடிப்பிற்கு மட்டும் என்னிடம் வாருங்கள்” என்று கூறியுள்ளார்.