சினிமா செய்திகள்

“கருப்பு” படத்தில் பிடித்த காட்சிகளையே மாற்ற வேண்டியிருந்தது – ஆர்ஜே பாலாஜி

கருப்பு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கருப்பு’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கருப்பு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, தணிக்கை குழு கருப்பு படத்திற்கு கொடுத்த பரிந்துரை குறித்து பேசியுள்ளார்.

அதாவது, "படம் தணிக்கை குழுவிடம் சென்றபோது, எனக்கு மிகவும் பிடித்திருந்த சில பகுதிகளை மாற்ற வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். இரண்டு ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய படம் இது, திடீரென மாற்றங்கள் செய்ய சொல்வது எளிதாக ஏற்க முடியவில்லை . பின்னர் ஆலோசித்து, தேவையான மாற்றங்களை செய்தோம். தற்போது படம் நாங்கள் நினைத்த படி அருமையாக வந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.