தமிழில் 'கொலை', 'சிங்கப்பூர் சலூன்', 'தி கோட்' படங்களில் நடித்த மீனாட்சி சவுத்ரி, தெலுங்கில் வெளியாகி 'ஹிட்' அடித்த 'லக்கி பாஸ்கர்' படத்துக்கு பிறகு பான் இந்தியா நடிகையாக உயர்ந்திருக்கிறார். தற்போது நாக சைதன்யா ஜோடியாக 'விருஷகர்மா' படத்தில் நடிக்கிறார். இதுதவிர 2 புதிய இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு நடிகை மீனாட்சி சவுத்ரி முதல்-அமைச்சர் விஜய் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "விஜய் அவர்களை போல ஒரு ஒழுக்கமான மனிதரை நான் பார்த்ததே இல்லை. காலை 7 மணி ஷாட் என்றால், சரியாக 7 மணிக்கு ஸ்பாட்டில் இருப்பார். பிறரின் நேரத்தை மதிப்பவர். 'ஆக்ஷன்' என்று சொல்லும் வரை அமைதியாக இருப்பார், அதன் பின் அப்படியே மாறிவிடுவார்."
"முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே வாழ்த்து அனுப்பினேன். பதிலளிக்க சில நாட்கள் ஆகும் என்று நினைத்தேன், ஆனால் உடனே ‘தேங்க்யூ' என்று மெசேஜ் அனுப்பினார். நம்மோடு பணிபுரிந்த ஒருவர் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது. அவர் வரலாறு படைத்து வருகிறார்." என்று தெரிவித்துள்ளார்.