சினிமா செய்திகள்

என்னிடம் ஒளிவுமறைவு கிடையாது - மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மீனாட்சி சவுத்ரி பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்தன.

தமிழில் 'கொலை', 'சிங்கப்பூர் சலூன்', 'தி கோட்' படங்களில் நடித்த மீனாட்சி சவுத்ரி, தெலுங் கில் வெளியாகி 'ஹிட்' அடித்த 'லக்கி பாஸ்கர்' படத்துக்கு பிறகு பான் இந்தியா நடிகையாக உயர்ந்திருக்கிறார். தற்போது நாக சைதன்யா ஜோடியாக 'விருஷகர்மா' படத்தில் நடிக்கிறார். இதுதவிர 2 புதிய இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மீனாட்சி சவுத்ரி பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்தன. மீனாட்சி சவுத்ரி பேசும்போது, 'எப்போதுமே உள்ளே ஒன்று வெளியே ஒன்று என்று நான் பேசி யது கிடையாது. இருந்ததும் கிடையாது. ஒளிவுமறைவு இல்லாமல் பேச, பழகக்கூடியவள் நான். அதனால் பல விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறேன்.

ஆனால் எனது இந்த போக்கை மாற்றக்கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் கேமராவுக்கு பின்னால் நடிக்கக்கூடாது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன்”, என்று குறிப்பிட்டார்.