சினிமா செய்திகள்

நான் ரசிகர் மன்றம் தொடங்கவில்லை - ஜேசன் சஞ்சய் அறிக்கை

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சிக்மா’.

நான் எந்த ஒரு ரசிகர் மன்றமும் தொடங்கவில்லை என்று முதல்-அமைச்சர் விஜய்யின் மகனும் ‘சிக்மா’ பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வரவேற்பைப் பெற்ற ‘சிக்மா’

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சிக்மா’. வணிக ரீதியிலான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டபோது, அவர் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் திரையில் தோன்ற வேண்டும் என்று ரசிகர்கள் பலர் தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர்.

எனக்கு ரசிகர் மன்றம் இல்லை

எனக்கு ரசிகர் மன்றம் இல்லை. நான் எந்த ஒரு ரசிகர் மன்றமும் தொடங்கவில்லை. எனது பெயரில் இயங்கும் பக்கங்கள் போலியானவை என்று முதல்-அமைச்சர் விஜய்யின் மகனும் ‘சிக்மா’ பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜேசன் சஞ்சய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

என்னுடைய அதிகாரப்பூர்வமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை முறைப்படி அறிவிக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே என்னால் நிர்வகிக்கப்படும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்குகள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Instagram: User name - jason.sanjay_official

https://www.instagram.com/jason.sanjay_official?igsh=NjcwbXRnNThtcmw0

SCROLL FOR NEXT