சினிமா செய்திகள்

"எனக்கு ரசனையும், ரசிகர்களும்தான்"... ஆடை குறித்து மாளவிகா மோகனன் ஓபன் டாக்

என்னை பார்ப்போரின் கண்களை ஈர்ப்பதே இலக்கு என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

'பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து கன்னடம், இந்தி மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.

'பேட்ட' படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்திலும் நடித்து கலக்கினார். அதனை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக 'சர்தார்-2' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இதற்கிடையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்களை அடிக்கடி களமிறக்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் மாளவிகா மோகனன், தற்போது எந்த விழாக்களில் கலந்துகொண்டாலும் கவர்ச்சி உடையிலேயே தரிசனம் தந்து அனைவரையும் வியக்க வைத்து விடுகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கதாநாயகிகளுக்கு தேவையானது ரசனையும், ரசிகர்களும் தான். அந்தவகையில் என் உடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறேன். என்னை பார்ப்போரின் கண்களை ஈர்ப்பதே இலக்கு. எனவே ஒவ்வொரு ஆடையையும் பார்த்து பார்த்து கவனமாக தேர்வு செய்கிறேன். என் உடைகளுக்கும், அழகுக்கும் வரும் ரசிகர்களின் ‘கமெண்ட்'டுகளை ரசிக்கிறேன்'' என்கிறார்.