சினிமா செய்திகள்

“இந்த கதாபாத்திரம் பேசப்படும் என நம்பினேன்” - வாமிகா கபி ஓபன் டாக்

அருண் மாதேஸ்வரன் இயக்கிய 'டி.சி.' நடிகை வாமிகா கபி 'சந்திரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

'டி.சி.' படத்தில் நடிக்கும்போதே, இந்த மாதிரியான கதாபாத்திரம் அவசியம்தானா, யோசித்துப் பார்க்கலாமே... என்று பலரும் என்னிடம் கேட்டார்கள் என நடிகை வாமிகா கபி தெரிவித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த 7ம் தேதி உலகளவில் வெளியான படம் 'டி.சி.' இந்த படத்தில் நடிகை வாமிகா கபி நாயகியாக நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த வாமிகா

இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்திருக்கிறார் வாமிகா கபி. பாலிவுட் நடிகையான வாமிகா கபி, ஏற்கனவே தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது நம்பிக்கை வீண்போகவில்லை

வாமிகா கபி கூறுகையில், 'டி.சி.' படத்தில் நடிக்கும்போதே, இந்த மாதிரியான கதாபாத்திரம் அவசியம்தானா, யோசித்துப் பார்க்கலாமே... என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். ஆனால் நிச்சயம் இந்த கதாபாத்திரம் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை.

இன்றைக்கு செல்லும் இடமெல்லாம் 'சந்திரா... சந்திரா...' என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். இதுதான் எனக்கு பெருமை. இதுதான் எனக்கு மகிழ்ச்சி. இதுதான் நான் கடவுளிடமும் வேண்டியது. நம்பிக்கையுடன், கடின உழைப்பு சேரும்போது வெற்றி நிச்சயம், என்கிறார்.

SCROLL FOR NEXT