சினிமா செய்திகள்

"மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்".. 'தி ஒடிஸி' படத்தை பாராட்டிய டாம் குரூஸ்

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், 'தி ஒடிஸி' திரைப்படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் நோலனின் புதிய படத்திற்கு பாராட்டு

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள பிரமாண்ட திரைப்படமான 'தி ஒடிஸி' (The Odyssey) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா. மேட் டாமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு விமர்சகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சிறப்பு ஐமேக்ஸ் காட்சியை பார்த்த டாம் குரூஸ்

இந்த நிலையில், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், 'தி ஒடிஸி' திரைப்படத்தின் சிறப்பு ஐமேக்ஸ் திரையிடலை பார்த்துள்ளார். படத்தை பார்த்த பிறகு தனது சமூக வலைதளத்தில் அவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"மீண்டும் பார்க்க காத்திருக்கிறேன்"

படத்தை பாராட்டிய டாம் குரூஸ், "கிறிஸ்டோபர் நோலன் மற்றும் முழு படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். இது மிகச் சிறப்பான சினிமா அனுபவம். இந்தப் படத்தை மீண்டும் பார்க்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'தி ஒடிஸி' திரைப்படத்திற்கு, டாம் குரூஸ் போன்ற முன்னணி நடிகரின் பாராட்டும் கிடைத்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT