சினிமா செய்திகள்

ரஜினி படத்தில் ஆடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை! - நடிகை பூர்ணா நெகிழ்ச்சி

நடிகை பூர்ணா பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் நடனமாடிய அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற ஸ்டைல் ஐகானுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அவருடன் திரையைப் பகிர்ந்து கொள்வேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என பூர்ணா தெரிவித்துள்ளார்.

மலையாளத் திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’, ‘கொடைக்கானல்’, ‘வேலூர் மாவட்டம்’, ‘வித்தகன்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘கொடிவீரன்’, ‘சவரக்கத்தி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

‘ஜெயிலர் 2’ பாடலில் நடனம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தமன்னா நடனமாடிய ‘காவாலா’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அல போலலோ’ பாடலுக்கு நடிகை பூர்ணா நடனமாடியுள்ளார். இந்தப் பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரஜினியுடன் இணைந்தது குறித்து நெகிழ்ச்சி

இந்த நிலையில், நடிகை பூர்ணா பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் நடனமாடிய அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற ஸ்டைல் ஐகானுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அவருடன் திரையைப் பகிர்ந்து கொள்வேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த வாய்ப்பை எனக்குப் பரிந்துரைத்த இயக்குநர் நெல்சனுக்கு நன்றி. இவ்வளவு பிரமாண்டமான படத்தில் மூன்று நிமிடப் பாடலில் இடம்பெறுவேன் என்று நினைக்கவில்லை. எனது கடின உழைப்புக்கும் பிரார்த்தனைக்கும் பலன் கிடைத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் படத்தில் நடனமாடிய அனுபவம் தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளதாக பூர்ணா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT