சினிமா செய்திகள்

என்னை ஓரின சேர்க்கையாளர் என விமர்சித்தனர்; நடிகை மவுனி ராய் வேதனை

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மவுனி ராயிடம், "உங்களை பற்றி நீங்கள் கேட்டறிந்த மோசமான வதந்தி என்ன?" என்று கேட்கப்பட்டது.

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் மவுனி ராய். இவர் ‘நாகினி’ என்ற இந்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்தி மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் இந்த சீரியல் மூலமாக ரசிகர்களை ஈர்த்தார். சீரியலை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய மவுனி ராய், முன்னணி நடிகைகளில் ஒருவராக இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்கிறார்.

கணவரை பிரிந்து வாழும் நடிகை

கடந்த 2022-ம் ஆண்டு சூரஜ் நம்பியாரை காதல் திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகள் நீடித்த அவரது குடும்ப வாழ்க்கை அவர்களின் தனிப்பட்ட காரணங்களால் முடிவுக்கு வந்தது. கடந்த மே மாதம் சமூக வலைத்தளங்கள் மூலமாக தாங்கள் இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த விவாகரத்து குறித்து பல தவறான தகவல்கள் பரவி வந்தன. இந்த பிரிவுக்கான காரணத்தை இவர்கள் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மவுனி ராயிடம், "உங்களை பற்றி நீங்கள் கேட்டறிந்த மோசமான வதந்தி என்ன?" என்று கேட்கப்பட்டது.

வதந்திக்கு மவுனி ராய் விளக்கம்

அதற்கு பதிலளித்த மவுனி ராய், "என்னை ஓரின சேர்க்கையாளர் என்று விமர்சித்தார்கள். முன்னணி நடிகையுடன் இணைந்து சுற்றியதால் அப்படி சொன்னார்கள். இது எனக்கு பயங்கர அதிர்ச்சியாக அமைந்தது. முதலில் வருந்தினேன். ஆனால் விமர்சிப்போருக்கு எங்கள் நட்பின் ஆழம் தெரியாது என்பதால் நான் அதை பொருட்படுத்தவில்லை. இப்போது விமர்சனங்களுக்கு நான் கவலைப்படுவதே கிடையாது" என்றார்.

மவுனி ராயையும், நடிகை திஷா பதானியையும் பற்றி பல்வேறு விமர்சனங்கள் மற்றும் வதந்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT