சினிமா செய்திகள்

3 திருமணங்களால் 17 ஆண்டுகளை வீணடித்து விட்டேன்- நடிகை மீரா வாசுதேவன்

தன்னை மூன்று திருமணம் செய்த பெண் என்று சமூகம் முத்திரை குத்திய போதும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி தான் கவலைப்படவில்லை என்று மீரா வாசுதேவன் கூறியுள்ளார்.

தனது வாழ்வில் நடந்த மூன்று திருமணங்களையும் மூன்று முட்டாள்தனமான திருமணங்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ள மீரா வாசுதேவன், அதற்காக தனது வாழ்வின் மிக மதிப்புமிக்க 17 ஆண்டுகளை வீணடித்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீரா வாசுதேவன். 2003 ம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு மலையாளத்தில் தன்மாத்ரா, குடும்பவிளக்கு உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் மற்றும் தொடர்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். அடுத்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

3 திருமணங்கள்

மலை​யாளத்​தி​லும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்​ப​தி​வாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்​வாலைத் திரு​மணம் செய்து கொண்​டார். 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்​தார். பின்​னர் நடிகர் ஜான் கொக்​கேனை 2012ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். 2016ம் ஆண்டு அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்ற மீரா வாசுதேவன், ஒளிப்பதிவாளர் விபின் என்பவரைத் திருமணம் செய்தார்.

தற்போது 44 வயதாகும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

17 பொன்னான ஆண்டுகளை இழந்துவிட்டேன்

தனது வாழ்வில் நடந்த மூன்று திருமணங்களையும் மூன்று முட்டாள்தனமான திருமணங்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ள மீரா வாசுதேவன், அதற்காக தனது வாழ்வின் மிக மதிப்புமிக்க 17 ஆண்டுகளை வீணடித்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

“நான் அடிக்கடி என் மகனிடம் சொல்வேன், மூன்று முட்டாள்தனமான திருமணங்களால் என் வாழ்வின் 17 ஆண்டுகளை வீணடித்து விட்டேன். அந்த நேரத்தை நான் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியிருந்தால் சினிமா, உடற்பயிற்சி, எனக்கான நல்ல நட்பு வட்டாரத்தை உருவாக்குவது என பல சாதனைகளை செய்திருக்கலாம். என் அப்பா, அம்மா, தங்கையுடன் அதிக நேரத்தை செலவிட்டிருக்கலாம். ஆனால் என்னை மதிக்காத, என்னை பொருட்படுத்தாத நபர்களுக்காக என் நேரத்தை வீணடித்துவிட்டேன்” என்று நடிகை மீரா வாசுதேவன் உருக்கமாக கூறியுள்ளார்.

மீரா வாசுதேவனின் முதல் திருமணம் 2005ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலுடன் நடந்தது. இந்த திருமணம் 2010-ல் விவாகரத்தில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு மலையாள நடிகர் ஜான் கொக்கனை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், 2016-ல் இந்த திருமணமும் முறிந்தது. இதன் பின்னர் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை மூன்றாவதாக திருமணம் செய்தார். இந்த திருமணம் ஒரு வருடத்திற்குள்ளாகவே கடந்த 2025 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது.

மகனுக்காக எடுத்த தவறான முடிவு

தனது மூன்றாவது திருமணம் காதலின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ள மீரா, என் மகன் மீது அந்த நபர் காட்டிய அன்பும் பரிவும்தான் என்னை அந்த உறவுக்குள் செல்ல வைத்தது. என் மகனுக்கு ஒரு நல்ல தந்தை கிடைப்பார் என்று நினைத்தேன். ஆனால் எனது அந்த கணிப்பு தவறாகிவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல், துரோகம், ஏமாற்றுதல் ஆகியவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், தங்களது மனைவி என்பவள் தாயை போல தம்மை பார்த்துக் கொள்ள வேண்டும், ஒவ்வொரு விஷயத்தையும் ஊட்டி விட வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண்களுடன் தன்னால் ஒருபோதும் வாழ முடியாது என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இனி மகனுக்காக வாழ்வேன்

தன்னை மூன்று திருமணம் செய்த பெண் என்று சமூகம் முத்திரை குத்திய போதும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி தான் கவலைப்படவில்லை என்றும், தான் செய்த தவறுகளை ஏற்றுக் கொள்வதாகவும், இனி யாரையும் சார்ந்து வாழாமல் தனது மகனுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக வாழ முயற்சி செய்து வருவதாகவும் மீரா வாசுதேவன் தனது பேட்டியில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT