சினிமா செய்திகள்

விமர்சனங்களை பொருட்படுத்த மாட்டேன் - நடிகை வாமிகா கபி

‘டி.சி.’ திரைப்படம் எனது மனதை மிகவும் கவர்ந்ததுடன், ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்திய படம் என்று நடிகை வாமிகா கபி தெரிவித்துள்ளார்.

சென்னை,

‘டி.சி.’ திரைப்படம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டி.சி.’. கடந்த ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படத்தில் பாலிவுட் நடிகை வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தில் அவர் ஏற்றுள்ள சந்திரா கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வாமிகா

இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் வாமிகா கபி. இவர் ஏற்கனவே 2016-ம் ஆண்டு வெளியான ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

கதாபாத்திரத்துக்காக ரிஸ்க் எடுக்கலாம்

‘டி.சி.’ படம் குறித்து வாமிகா கபி கூறியதாவது:

“‘டி.சி.’ திரைப்படம் எனது மனதை மிகவும் கவர்ந்ததுடன், ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்திய படம். பொதுவாக ஒரு கதாபாத்திரம் எனக்குப் பிடித்துவிட்டால், அதன்பிறகு அதிகம் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொள்வேன். அப்படித்தான் இந்தப் படத்திலும் நடித்தேன். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் ஏன் நடிக்கிறீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்டனர். நல்ல கதாபாத்திரத்துக்காக எந்தவிதமான ரிஸ்க்கையும் எடுக்கலாம் என்பதுதான் அதற்கு எனது பதில்.

விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் வகையிலான கதாபாத்திரங்கள் கிடைப்பது மிகவும் அரிது. அப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை ஏற்று நடிக்காமல் இருப்பதுதான் தவறு” என்றார்.

SCROLL FOR NEXT