தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையும், அதிவேக ஆட்டக்காரருமான ஸ்ரீலீலா, தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'பராசக்தி' படத்தில் நடித்து அறிமுகமானார். தற்போது தனுஷ் ஜோடியாக 'ஓம்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ரீலீலா, "என்னை பொறுத்தவரை எந்த மொழியில் படம் நடித்தாலும், அந்த மொழி ரசிகர்களை ஈர்க்கவேண்டும். தெலுங்கில் அதை செய்துவிட்டேன்.
இப்போது தமிழ் ரசிகர்களை குறிவைத்திருக்கிறேன். நிச்சயம் அவர்களின் இதயங்களில் இடம்பிடிப்பேன், அதை கைப்பற்றுவேன். எனவே தமிழ் ரசிகர்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டது கவனம் ஈர்த்துள்ளது.