நடிகை சார்மி கவுர் தயாரிப்பில், இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ள புதிய திரைப்படம் 'ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு'. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, தபு, சம்யுக்தா, வி.டி.வி. கணேஷ், துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பட விழாவில் பேசிய நடிகர் வி.டி.வி. கணேஷ், "இந்த படத்தில் நடிகை தபுவுக்கு உதவியாளராக நடித்துள்ளேன். 'காதல் தேசம்' படத்தில் தபுவை பார்த்து ரசித்தவன் நான். அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், முதல் நாளிலிருந்தே மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன்.
அப்போது பார்த்த குட்டைப் பாவாடை இன்று காலத்திற்கேற்ப மாறியிருக்கலாம். ஆனால் அவரது பெண்மையான குணமும், மென்மையான பேச்சும் அப்படியே இருக்கிறது. என்னிடம் அவர் 'வணக்கம்' கூறி பேசும்போதே நான் மகிழ்ச்சியில் திளைத்துவிட்டேன்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "விதவிதமான வீட்டு உணவுகளை எனக்கு கொடுத்து அன்புடன் உபசரித்தார். அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், தபுவின் பக்கத்து வீட்டுக்காரராக பிறக்க வேண்டும் என்பதே என் ஆசை. இதை அவரிடமே சொல்லிவிட்டேன்.
அடிக்கடி அவரை எட்டிப் பார்த்தாவது ரசிக்கலாம் அல்லவா? நம்மால் அதைத்தான் செய்ய முடியும். ஏனெனில் தபு மிகவும் பிசியான நடிகை" என்று நகைச்சுவையாக பேசி அரங்கில் இருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தினார்.