சினிமா செய்திகள்

இனிப்பு கடையில் இருந்து பசியுடன் வெளியேறினால்... மனைவியின் துரோக குற்றச்சாட்டிற்கு பிரபல நடிகர் சூடான பதில்

நடிகைகளுடன் நான் ஏற்படுத்தி கொள்ளும் உறவானது, அன்புக்கான பிணைப்பாகும் என்றார்.

புனே

இனிப்பு கடையில் இருந்து பசியுடன் வெளியேறினால் அது சோகம் என மனைவியின் துரோக குற்றச்சாட்டிற்கு பிரபல நடிகர் சூடான பதில் அளித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் நடிகர்கள் பரபரப்புடன் இயங்குவது போல், கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லாமல் செய்திகள் வலம் வருவது வழக்கம். அந்த வகையில், எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் 90 காலகட்டத்தில் பிரபல நடிகரான கோவிந்தா தொடர்பாகவும் கிசுகிசு செய்திகள் வெளியாகி இருந்தன.

புது நடிகை

ஆனால், இந்த முறை அவருடைய மனைவி சுனிதா அகுஜா இதனால் அதிகம் கோபப்பட்டு உள்ளார். கோவிந்தா மீது அவர் அடிக்கடி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கம். கோவிந்தாவின் செயல்பாடுகள், மனைவி தவிர்த்து பிறருடனான தொடர்பு போன்றவற்றை பற்றியும் அவர் அவ்வப்போது வேதனையை வெளிப்படுத்துவார்.

1990-ம் ஆண்டு சக நடிகையுடன் சேர்ந்து கொண்டு தன்னை மோசம் செய்து விட்டார் என முன்பு அகுஜா கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கோவிந்தா புதிய படத்தில் நடித்து வருகிறார். அதில், அவருடன் புது நடிகையான கோமல் ராணி சுவாங்கர் ஜோடியாக நடிக்கிறார். அவருடன் கோவிந்தா ஒன்றாக சுற்றி வருகிறார். விமான நிலையத்தில் ராணியுடன் கோவிந்தா ஒன்றாக சென்ற வீடியோக்கள் வைரலாகி இருந்தன.

63 வயதில் தேவையா?

இதுபற்றி அறிந்த அகுஜா, இளம் வயதில் அந்த தவறுகள் நடந்தன. ஆனால், 63 வயதில் இவற்றை எல்லாம் காது கொடுத்து கேட்பது என்பது எனக்கு சரியாக இருக்காது என்றார். கோமல் என்ற பெயரை கேட்டாலே வெறுப்பாக உள்ளது என்றும் கூறினார்.

இதுபற்றி நடிகர் கோவிந்தா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அகுஜா கடந்த காலங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது உண்மைதான். எனினும், நடிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தபோது, எங்களுடைய குழந்தைகளை பொறுப்புடன் வளர்த்து ஆளாக்கியவர் அவர் என்று அகுஜாவை பற்றி பெருமையாக கூறினார்.

அவர் கூறும்போது, எனக்கு எதிராக அவர் குற்றச்சாட்டு கூறுவதற்கு அவருடைய அன்புதான் காரணம். அதனை நான் அன்புடன் ஏற்று கொள்கிறேன் என்றார். எங்களுடைய குடும்பத்தில் நிறைய குழந்தைகளை அவர் வளர்த்து இருக்கிறார். அவர்கள் தற்போது வளர்ந்து பெரியவர்களாகி விட்டனர்.

கெமிஸ்ட்ரி ஒத்து போனது

அவர்களிடம் அகுஜா நன்றாக பழகி வருகிறார். அவர் என்னை பற்றி நான்கு வார்த்தைகள் புகழ்ந்து பேசினால், பின்னர் ஒரு விமர்சனமும் வைத்து விடுவார். அதில் அதிக அன்பையே நான் பார்க்கிறேன் என்றார்.

சக நடிகைகளுடன் நடித்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்களுடன் கெமிஸ்ட்ரி ஒத்து போனது. அதுபோன்று நடித்து வெளியான, பல பாடல்கள் வெற்றி பெற்றுள்ளன. நடிகைகளுடன் நான் ஏற்படுத்தி கொள்ளும் உறவானது, அன்புக்கான பிணைப்பாகும் என்றார்.

34 வயது வரை அப்பாவியாக இருந்தேன். நான் ஏன் அப்பாவியாக இருக்கிறேன் என அதற்காக வருத்தப்பட்டு உணர்ந்திருக்கிறேன் என கூறிய கோவிந்தா, தொடர்ந்து பேசும்போது, நீங்கள் இனிப்பு கடை ஒன்றில் நிற்கிறீர்கள். தொடர்ந்து பசியுடனேயே இருக்கிறீர்கள். அப்படியே கடையில் இருந்து வெளியேறி விடுகிறீர்கள் என்றால், அதனை விட சோக விசயம் வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார். அவர் இப்படி கூறியது, தன்னை மோசம் செய்து விட்டார் என அகுஜா கூறிய விசயங்களை உண்மை என கோவிந்தா ஏற்று கொள்கிறாரோ என எண்ண தோன்றுகிறது.