2026ஆம் ஆண்டுக்கான 26வது சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி விருதுகள் வெற்றியாளர்களின் பட்டியலில் ‘துரந்தர்’ திரைப்படம் 12 விருதுகளை வென்றுள்ளது.
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான 26வது சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி விருதுகள் வெற்றியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த விருது விழாவில் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் அதிக விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் என மொத்தம் 12 விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
சிறந்த திரைப்படம் – துரந்தர் (தயாரிப்பாளர்கள்: ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா தர், லோகேஷ் தர்).
சிறந்த இயக்குநர் – ஆதித்யா தர்.
சிறந்த நடிகர் – ரன்வீர் சிங்.
சிறந்த துணை நடிகர் – சஞ்சய் தத்.
சிறந்த வில்லன் கதாபாத்திர நடிகர் – அக்ஷய் கண்ணா.
சிறந்த இசையமைப்பு – ஷாஷ்வத் சச்தேவ்.
சிறந்த மூலக் கதை – ஆதித்யா தர்.
சிறந்த ஒளிப்பதிவு – விகாஷ் நோவ்லாகா.
சிறந்த திரைக்கதை – ஆதித்யா தர்.
சிறந்த வசனம் – ஆதித்யா தர்.
சிறந்த படத்தொகுப்பு – சிவ்குமார் வி. பனிக்கர்.
சிறந்த ஒலிவடிவமைப்பு – பிஷ்வதீப் சட்டர்ஜி.
‘சையாரா’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனீத் பத்தா, சிறந்த நடிகை விருதை வென்றார். ‘சையாரா’ திரைப்பட பாடலுக்காக இர்ஷாத் கமீல் சிறந்த பாடலாசிரியர் விருதையும், ஹீம் அப்துல்லா சிறந்த பின்னணிப் பாடகர் விருதையும், ஸ்ரேயா கோஷல் சிறந்த பின்னணிப் பாடகர் விருதையும் பெற்றனர்.
‘ஜாலி எல்.எல்.பி 3’ திரைப்படத்தில் நடித்ததற்காக ஹுமா குரேஷி சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.
‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ சிறந்த சர்வதேச திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் இயக்கிய ‘தி பேட்ஸ் ஆஃப் பாலிவுட்’ சிறந்த வெப்தொடர் மற்றும் சிறப்பாக இயக்கப்பட்ட தொடருக்கான இரண்டு விருதுகளை வென்றது.
‘பாதாள் லோக் சீசன் 2’ தொடரில் நடித்ததற்காக ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் திலோத்தமா ஷோம் ஆகியோர் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றனர்.