பெங்களூருவில் பிறந்து வளர்ந்து, மாடலிங் துறையில் நுழைந்து, 2016-ம் ஆண்டில் "மிஸ் சவுத் இந்தியா" அழகியாக வெற்றிபெற்று கலக்கியவர் சனம் ஷெட்டி. தமிழில் 'அம்புலி', 'கதம் கதம்', 'வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட் டான்', 'வால்டர்', 'ஊமை செந்நாய்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மேலும் பிரபலமான சனம் ஷெட்டி, சினிமா துறையில் பாலியல் புகார்கள் தொடர்பாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். பட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், சனம் ஷெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்சினை இருப்பதாகவும், அதற்காக சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.