சினிமா செய்திகள்

இந்த தீபாவளிக்கு ஒரு சிறப்பான விஷயத்தை செய்யப்போகிறேன் - திரிஷா

இன்ஸ்டாகிரம் ஸ்டோரியில் திரிஷாவின் ஸ்டோரி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

நடிகை திரிஷா வெளியிட்டிருக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. சமீபத்தில் விஜய்யுடன் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இப்போது தீபாவளியை முன்னிட்டு அவர் பகிர்ந்திருக்கும் பதிவு பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற நாய் ஒன்றை தத்தெடுத்து அதற்கான உணவு செலவை ஏற்றுக்கொள்வது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தீபாவளிக்கு நான் ஒரு சிறப்பான விஷயத்தை செய்கிறேன். மீட்கப்பட்ட ஆதரவற்ற நாய் ஒன்றின் உணவுக்கு நான் ஸ்பான்சர் செய்கிறேன். வெறும் ₹1,000 ரூபாய் இருந்தால், மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு ஒரு மாதம் முழுமைக்கும் உணவளிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது 30 நாட்களுக்கு வயிற்றுப்பசியை தீர்த்து மகிழ்ச்சியான தருணங்களைத் தரும்.

இந்த தீபாவளிக்கு நீங்களும் என்னுடன் இணையதளத்தில் ரூ.1,000 செலுத்தி ஒரு நாயின் உணவுக்கு ஸ்பான்சர் செய்து, அவற்றின் வாழ்க்கையில் சிறிய மகிழ்ச்சியைக் கொண்டு வாருங்கள். புளூ க்ராஸ் ஆப் இந்தியா அமைப்புக்கு நிதியுதவி செய்யுங்கள். இந்த தீபாவளியை ஆதரவற்ற நாய்களுக்கு சிறப்பானதாக தீபாவளியாக மாற்றுவோம். என பதிவிட்டுள்ளார்.

நீண்ட காலமாகவே விலங்குகள் நல அமைப்பான புளூ க்ராஸ் ஆப் இந்தியாவுடன் இணைந்து பல சமூக சேவைகளை செய்து வரும் திரிஷா, பண்டிகை காலத்தில் பட்டாசு மற்றும் கொண்டாட்டங்களை தாண்டி, ஆதரவற்ற விலங்குகளின் பசியை போக்க முன்வந்து நிதியுதவி திரட்டி வருவது அவரது ரசிகர்களிடையேயும் நெட்டிசன்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரிஷாவின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT