சினிமா செய்திகள்

‘சினிமாவுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்’ - நோரா பதேகி

சினிமாவில் இருப்பதை தனது வாழ்நாள் அதிர்ஷ்டமாக கருதுவதாக நடிகை நோரா பதேகி தெரிவித்துள்ளார்.

மும்பை,

பாலிவுட் சினிமாவின் 'கவர்ச்சி புயல்' என்று அழைக்கப்படும் நடிகை நோரா படேஹி. இவரது கொஞ்சல் நடிப்புக்கும், வளைவு நெளிவான ஆட்டத்துக்கும் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் கூட உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நெல்சன் இயக் கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்-2' படத்தில் நோரா படேஹி கவர்ச்சி ஆட்டம் போட்டு கலக்கி இருக்கிறார். தியேட்டர்களில் அவரது பாடல் காட்சிக்கு ரசிகர்கள் உற்சாக ஆட்டம் போட்டு வருகிறார்கள்.

இது தவிர ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா-4' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்ட உள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் சினிமாவுக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று நோரா படேஹி தெரிவித்துள்ளார். தனது சினிமா பயணம் குறித்து அவர் கூறியதாவது;-

“சினிமாவுக்கு வருவேன் என்று நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது ஆனால் தற்போது சினிமா இல்லாமல் எதுவும் இல்லை என்று ஆகிவிட்டது. என் சினிமா பயணத்தில் நிறைய மேடு பள்ளங்களை பார்த்து விட்டேன். நிறைய கஷ்ட நஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். அதுபோன்ற கஷ்ட காலங்களை நினைத் தாலே எப்படி இவற்றை கடந்து வந்தேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

பொதுவாகவே திரையுலகினர் தானே என்று அனைவரும் எளிதாக நினைத்து விடுவார்கள் ஆனால் உண்மை அது கிடையாது சினிமா பயணம் மிகக் கடுமையானது இங்கு கடின உழைப்பும், திறமையும் இருந்தால் நிச்சயம் இலக்கை அடையலாம். மற்ற மனிதர்களை காட்டிலும் சினிமா பிரபலங்களுக்கு புகழும் பெயரும் வேகமாக கிடைத்து விடுகிறது. இது யாருக்குமே கிடைக்காத அதிர்ஷ்டம் ஆகும். அந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்திருக்கிறது.

எத்தனையோ ஜாம்பவான்கள், ஸ்டார்கள் நிறைந்த இந்த திரையுலகில் எனக்கும் ஒரு பெயர் இருக்கிறது. எனக்கும் ஒரு அடையாளம் கிடைத்து இருக்கிறது. எனக் கும் ஒரு மதிப்பு தரப்படுகிறது என்பதில் உள்ளபடியே நான் பெருமை கொள்கிறேன் அந்த வகையில் இந்த சினிமாவில் இருப்பதையே உயர்வாக என் வாழ்நாள் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

எனக்கு புகழும் பெருமையும் பணமும் தந்து அழகு பார்க்கும் இந்த சினிமாவுக்காக எதை யும் செய்யத் தயாராகவே இருக்கிறேன். எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT