சினிமா செய்திகள்

இந்தி படத்தில் டைட்டானிக் கதாநாயகன்

பிரபல ஹாலிவுட் கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோ இந்தி படத்தில் நடிக்கிறார்.

ஹாலிவுட் வில்லன் நடிகர்கள் தமிழ், இந்தி படங்களில் நடிக்கின்றனர். தற்போது பிரபல ஹாலிவுட் கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோவும் இந்திக்கு வருகிறார். இவர் டைட்டானிக், இன்செப்ஷன், ஏவியேட்டர், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். டைட்டானிக் படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி 10 ஆஸ்கார் விருதுகளை வென்றது. தொடர்ந்து டிகாப்ரியோவின் பல படங்கள் ஆஸ்கார் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டன. தி ரெவனன்ட் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

அடுத்த மாதம் வழங்கப்பட உள்ள ஆஸ்கார் விருதுக்கு இவரது நடிப்பில் வெளியான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. டிகாப்ரியோவுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

டிகாப்ரியோ நடித்த கிரேட் காஸ்பி படம் அமிதாப்பச்சன் நடிக்க இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் டிகாப்ரியோ அளித்துள்ள பேட்டியொன்றில் தனக்கு இந்தி படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று கூறியுள்ளார். இந்தி படமொன்றில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், விரைவில் இந்தியில் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்