ராஷ்மிகா மந்தனா 
சினிமா செய்திகள்

முத்த காட்சியில், தெலுங்கு நடிகை!

தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர், ராஷ்மிகா மந்தனா.

தினத்தந்தி

இவர், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நடித்த முத்த காட்சி பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா மந்தனா, நான் துணிச்சல் மிகுந்த பெண். எனக்கு சரியென்று தெரிகிற முடிவை தைரியமாக எடுப்பேன். முத்த காட்சியில் நடித்ததும் அப்படித்தான் என்றார்.

ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கி வந்த நீங்கள் இப்போது உங்கள் சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டீர்களாமே? என்று ஒரு நிருபர் கேட்டார். உடனே ரஷ்மிகா மந்தனா, நீங்கள் செய்கிற வேலைக்கு சம்பள உயர்வை எதிர்பார்க்க மாட்டீர்களா? நான் நடிக்க ஆரம்பித்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சம்பளத்தை உயர்த்துவதில் என்ன தப்பு இருக்கிறது? என்று கேட்டு, கேள்வி எழுப்பிய நிருபரை மடக்கினார்.

ராஷ்மிகா மந்தனா பற்றிய இன்னொரு தகவல், விஜய்க்கு ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது!

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை