சினிமா செய்திகள்

ரஜினியை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்த இன்பன் உதயநிதி

ரஜினி நடித்த ‘ஜெயிலர் 2’ படத்தை தமிழ்நாட்டில் இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது.

இன்பன் உதயநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது ‘ஜெயிலர் 2’ படம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

‘ஜெயிலர் 2’ படத்தை வெளியிட்ட ரெட் ஜெய்ண்ட்

இப்படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் திரை பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இதனால் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் ரூ.125 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியை சந்தித்த இன்பன் உதயநிதி

இந்த நிலையில் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெய்ண்ட் மூவிஸின் தலைமை பொறுப்பில் இருக்கும் இன்பன் உதயநிதி ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இப்புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரஜினிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எமோஜியை கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT