சினிமா செய்திகள்

இனிகோ பிர​பாகரின் “மின்னும் ஓர் இரவு” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இனிகோ பிர​பாகர், அஞ்சு கிருஷ்ணா அஷோக் நடித்​துள்ள ‘மின்​னும் ஓர் இரவு’ திரைப்​படத்திற்கு பிரணவ் சூரஜ் இசையமைத்​துள்​ளார்.

சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படம் நவம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இனிகோ பிர​பாகர் முதன்மை வேடத்​தில் நடித்​துள்ள திரைப்​படம் ‘மின்​னும் ஓர் இரவு’. இதில் அஞ்சு கிருஷ்ணா அஷோக் நாயகியாக நடிக்க சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மருத்​து​வர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி.ராபர்ட் புரொடக் ஷன்ஸ் சார்​பில் தயாரித்​துள்ள இப்​படத்தை சிவபிரபு செல்​வ​ராஜ் இயக்​கி​யுள்​ளார். சுரேஷ்குமார் சுந்​தரம் ஒளிப்​ப​திவு செய்ய பிரணவ் சூரஜ் இசையமைத்​துள்​ளார்.

இயக்குநர் சிவபிரபு செல்​வ​ராஜ், “ஒரே இர​வில் நடக்​கும் கிரைம் திரில்​லர் படம் இது. இரவுப் பொழுதை உற்​சாக​மாகக் கடக்​க காட்​டுப் பகுதிக்​குள் செல்​லும் நண்​பர்​கள் மிகப்​பெரிய அதிர்ச்​சிகர​மான சம்​பவங்​களில் சிக்​கு​கின்​றனர். அதி​லிருந்து மீண்​டார்​களா, இல்லையா என்​பதே கதை” என்​றார்.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இனிகோ பிர​பாகர் நடித்​துள்ள‘மின்​னும் ஓர் இரவு’ படம் வரும் நவம்​பர் 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT