இனிகோ பிரபாகர், அஞ்சு கிருஷ்ணா அஷோக் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மின்னும் ஓர் இரவு’. இதில் அஞ்சு கிருஷ்ணா அஷோக் நாயகியாக நடிக்க சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மருத்துவர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி.ராபர்ட் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தை சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் சிவபிரபு செல்வராஜ், “ஒரே இரவில் நடக்கும் கிரைம் திரில்லர் படம் இது. இரவுப் பொழுதை உற்சாகமாகக் கடக்க காட்டுப் பகுதிக்குள் செல்லும் நண்பர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்குகின்றனர். அதிலிருந்து மீண்டார்களா, இல்லையா என்பதே கதை” என்றார்.
இனிகோ பிரபாகர் நடித்துள்ள‘மின்னும் ஓர் இரவு’ படம் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இனிகோ பிரபாகர், அஞ்சு கிருஷ்ணா அஷோக் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.