சினிமா செய்திகள்

திரையுலக வாழ்க்கை குறித்து ஆஷிகா ரங்கநாத் சொன்ன சுவாரசியமான கருத்து

ரசிகர்களின் அன்பும், புகழும், பணமும் கிடைப்பதால் திரை பிரபலங்கள் அதிர்ஷ்டக்காரர்கள் என ஆஷிகா ரங்கநாத் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ரசிகர்களின் அளவற்ற அன்பு, மரியாதை, பெருமை, புகழ், பணம் எனப் பல விஷயங்கள் திரைப் பிரபலங்களுக்குக் கிடைக்கின்றன. அந்த வகையில், சினிமாவில் இருப்பது பெரும் பாக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் பிசி

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக ஆஷிகா ரங்கநாத் திகழ்கிறார். ‘கிரேசி பாய்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ‘விஸ்வம்பரா’, ‘காதவைபவா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் அதர்வாவுடன் ‘பட்டத்து அரசன்’, சித்தார்த்துடன் ‘மிஸ் யூ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘சர்தார் 2’ திரைப்படத்திலும் ஆஷிகா ரங்கநாத் நடித்திருந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சினிமாவில் இருப்பதே பாக்கியம்

இந்நிலையில், சினிமாவில் இருப்பதே பெரும் பாக்கியம் என்று ஆஷிகா ரங்கநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சினிமா என்பது ஒரு பெருங்கடல். அதில் நீந்துவது என்பது பெரிய விஷயம். ரசிகர்களின் அன்பைப் பெறுவதற்காகப் போராட வேண்டும். அத்தகைய அன்பு கிடைத்துவிட்டால், அந்தப் பிரபலம் அதிர்ஷ்டசாலிதான்.

ரசிகர்களின் அளவற்ற அன்பு, மரியாதை, பெருமை, புகழ், பணம் எனப் பல விஷயங்கள் திரைப் பிரபலங்களுக்குக் கிடைக்கின்றன. இதைப் பார்க்கும்போது ஒவ்வொரு திரைப் பிரபலமும் அதிர்ஷ்டசாலிதான். அந்த வகையில், சினிமாவில் இருப்பது பெரும் பாக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT