சினிமா செய்திகள்

விரைவில் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் அனன்யா பாண்டே?

இந்தி சினிமாவில் ஜொலித்து வரும் நடிகை அனன்யா பாண்டேவை, தமிழில் நடிக்க வைக்க தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சென்னை,

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனன்யா பாண்டே. நடிகர் சங்கி பாண்டேயின் மகளான இவர் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு காலி பீலி, கெஹ்ரையான், லைகர், சிடிஆர்எல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்தி சினிமாவில் முன்னணியில் ஜொலித்து வரும் நடிகை அனன்யா பாண்டேவை, தமிழில் நடிக்க வைக்க தீவிர பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு நடிகரின் படத்தில் அவர் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கதையில் சில திருத்தங்களை மட்டும் கதாநாயகி தரப்பில் விதித்துள்ளார்களாம். அனேகமாக ஓ.கே. ஆகிவிடும் என்கிறார்கள். இது உறுதியானால் விரைவில் அனன்யா பாண்டேவை கோலிவுட் உலகிலும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.