சினிமா செய்திகள்

ஆபாசமாக நடிக்க ரூ.7 கோடி வாங்கிய நடிகை தமன்னா?

நடிகை தமன்னா ஜி கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆகிய வெப் தொடர்களில் அளவுக்கு மீறி ஆபாச காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். படுக்கை அறை காட்சிகளில் மிகவும் நெருக்கம் காட்டி இருந்தார். முத்த காட்சிகளிலும் தாராளமாக நடித்து இருந்தார். சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தமன்னாவின் இந்த எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களே நிரம்பி இருந்தன.

இந்திய கலாசாரத்தை மீறி தமன்னா நடித்து இருக்கிறார் என்று விமர்சனங்கள் கிளம்பின. சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்காகவே அப்படி நடித்தேன் என்று தமன்னா விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் ஆபாசமாக நடிக்க தமன்னா ரூ.7 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் பரவி உள்ளது. அந்த தொடரில் தமன்னாவின் எல்லை மீறிய கவர்ச்சி காட்சிகள் சுமார் 30 நிமிடங்கள் உள்ளன. அதில் நடிக்க அவர் மறுத்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து உள்ளனர்.

வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க தமன்னா ரூ.5 கோடி சம்பளம் பெறுகிறார். தற்போது தமன்னா தமிழில் ஜெயிலர், தெலுங்கில் போலோ சங்கர் படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை